அசித தல்வத்த சென்ட்ரல் பினான்ஸ் நிர்வாகக் குழுவில் இணைந்தார்

சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் சுதந்திரமான, நிரைவேற்று அதிகாரமற்ற இயக்குனராக திரு. அசித தல்வத்த நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 2016, ஜூன் 30 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

அவரது நியமனம் 70 வயதான ஏ.என்.பெர்னான்டோ அவர்களின் ஓய்வை அடுத்து நிதி நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளுக்கான மத்திய வங்கியின் 2008 கூட்டுத்தாபன இல. 3 பிரிவு 5 (1) விதிகளின் பிரகாரம் வழங்கப்படுகிறது.

அசித தல்வத்த மக்கள் வங்கி மற்றும் எஸ்.எம்.ஈ. வங்கியில் இயக்குநராக பதவி வகித்துள்ளார். இவர் தற்போது பல்வேறு நிறுவனங்களின் நிர்வாக சபைகளில் சுதந்திர நிறைவேற்றதிகாரமற்ற இயக்குநராக கடமையாற்றிவருகிறார்.

இவர் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம், இங்கிலாந்தின் முகாமைத்துவ பட்டயக் கணக்காளர் நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராவார். அவர் ICASL மற்றும் ஒல்லாந்தின் வெக்னிங்கெம் பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மற்றும் நிதி நிர்வாக பட்டதாரி டிப்ளோமாவையும், மற்றும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தில் MBA பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் அவர் இல்லினொய்ஸ், இவான்ஸ்டியொன் இல் உள்ள முகாமைத்து வத்துக்கான கெலொக் பட்டப்படிப்புக் கல்லூரி நடத்திய கெலொக் நிறைவேற்று நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டுள்ளார்.

அசித தல்வத்தை அண்மையில் Ernst & Young நிறுவனத்திலிருந்து 37 வருட சேவையின் பின்னர் ஓய்வுபெற்றார். அந் நிறுவனத்தில் ஒரு தசாப்தத்திற்கும் அதிக காலம் முகாமைத்துவ பங்குதாரராக கடமையாற்றியுள்ளார். அவர் Ernst & Young நிறுவனத்தின் தூர கிழக்கு பிரதேச நிறைவேற்றுக்குழுவில், பிரதேச ஆலோசனைக் கவுன்சில் மற்றும் ASEAN தலைமைத்துவ குழுவில் பணியாற்றியுள்ளார்.

இவர் ICASL மற்றும் CIMA இலங்கைப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன் நியதிக் கணக்கியல் தரநிலைகள், தணிக்கைகள் தரக் குழு, அவசர பிரச்சினைகள் செயலணி மற்றும் ICASL தேர்வுக் குழு ஆகியவற்றிலும் தலைவராக பணியாற் றியுள்ளார்.

அபிவிருத்திக்கான இலங்கையின் கூட்டுத்தாபன ஆளுகையுடன் அசித தல்வத்த நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். ICASL 2003 ஆண்டுக்கான கூட்டு நிறுவன சிறந்த பயிற்சி குறியீடு வளர்ச்சியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். கூட்டு நிறுவன ஆளுகை ICASL மற்றும் இலங்கை பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷனுடன் இணைந்து நடத்திய கூட்டு நிறுவன சிறந்த பயிற்சிக் குறியீடு 2013 குழுவில் இணை தலைமை தாங்கினார்.

இவர் தற்போது இலங்கை ஒருங்கிணைந்த அறிக்கையிடல் சிபாரிசுகளுக்கான ஆய்வுக் குழுவிலும், அதேபோன்று கூட்டுத்தாபன ஆளுகையில் சிறந்த பயிற்சிக் குறியீட்டு மீளாய்வுக் குழுவிலும் தலைமை வகிக்கின்றார்.

புதிய நியமனத்தின் பின்னர் சென்ட்ரல் பினான்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் திரு.ஜே.டி.பண்டாரநாயக்க, திரு.ஈ.எச்.விஜேநாயக்க (முகாமைத்துவ பணிப்பாளர்), திரு.ஜி.எஸ்.என்.பீரிஸ், திரு.ஆர்.ஈ.ரம்புக்வெல்ல, திரு.ஏ.கே.குணரட்ன, திரு.சி.எல்.கே.ஜயசூரிய, திரு.டி.பி.டி சில்வா, திரு.எஸ்.விக்ரமநாயக்க, திரு.எஃப்.மொஹிதீன் மற்றும் திரு.அசித தல்வத்த ஆகியோர் அடங்குகின்றனர்.