எமது வரலாறு

 

deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance, cf finance sri lanka
எங்கள் நிறுவனர் - சந்திரா விஜேநாயக்க

கண்டியில் வாகன காட்சியகத்தின் உரிமையாளரும் பில்லியட் ஆட்டக்காரருமான ஜே.ஏ.கப்பூருடன் நம் நிறுவனத்தின் ஸ்தாபகரான சந்திரா விஜேநாயக நடத்திய உரையாடலே தனது முதலாவது நிதிக் கம்பனியை கண்டியில் நிறுவ ஊக்கமளித்தது. கபூர் விஜேநாயகவிடம் “தான் தனது வாகன காட்சியகத்திலுள்ள வண்டியொன்றுக்கு குத்தகை நிதியிட வேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொழும்பிற்கே செல்ல வேண்டியன்ளதாகக் கூறினார்;. இது மிக அசௌகரியமாக உள்ளதாகவும் கண்டியில் நிதிநிறுவனம் ஒன்று இருந்திருந்தால் பில்லியட் ஆடுவதற்கு தனக்கு கூடியளவு நேரம் இருக்கும் எனவும் நகைச்சுவையாகக் கூறினார்.

இவ்வாறே மலையகத்தில் முதலாவது நிதிக் கம்பனி உருவானது. 1957ம் ஆண்டு தனியார் வரையறுக்கப்பட்ட கம்பனியாக ஸ்தாபிக்கப்பட்ட சென்றல் பினான்ஸ் கம்பனி கண்டி மற்றும் மத்திய பிரதேசத்தில் பயணிகள் போக்குவரத்து மற்றும் பொருட்கள் போக்குவரத்து போன்றவற்றிற்கு குத்தகைக் கொள்வனவு வசதிகளை ஏற்படுத்தி நிதிச் சேவைகளை வழங்கும் தனது செயற்பாட்டை ஆரம்பித்தது.

கொழும்பு தரகர் சங்கத்திடமிருந்து விலைகோரலுடன், கம்பனி பொதுக்கம்பனியாக 1969ம் ஆண்டு மாற்றப்பட்டது. அத்துடன் கொழும்பிற்கு வெளியே யுத்த காலத்திற்குப் பின் அத்தகைய நிரல்படுத்தலைப் பெற்றுக்கொண்ட முதல் கம்பனி இதுவாகும். அதன் தலைமை அலுவலகம் கண்டியில் இருந்தாலும், சென்ட்ரல் பினான்ஸ் கம்பனியானது நாட்டின் பல பாகங்களுக்கு கிளைகளை வியாபித்துள்ளது. பல வருடங்களாக முன்னெற்றப் பாதையில் பயணித்து நாட்டில் மதிப்புக்குரிய நிதி நிறுவனமாகத் திகழ்வதுடன், சொத்து குத்தகைக்கு விடுதல், பங்குநிதி முகாமைத்துவம், வீடு கட்டுதல், காப்புறுதி தரகுச் சேவை, சேமிப்பு வைப்புக்கள் உட்பட்ட பல்தரப்பட்ட சேவைகளை நேரடியாகவோ அதன் துணை நிறுவனங்கள் ஊடாகவோ வழங்குகிறது.

 

டாா்