திரு. அர்ஜுன் ப்ர்ணான்டோ சென்ட்ரல் பைனானஸ் சபையில் இணைந்துள்ளார்

அர்ஜுன் பர்ணான்டோ சபைக்கு 2017 ஆகஸ்ட் 16ஆம் திகதி நியமிக்கப்படும் போது கணக்காய்வூக் குழு அங்கத்தவராகவூம்இ ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைக்குழு அங்கத்தவராகவூம் பணியாற்றி வந்தார்.

திரு. பர்ணான்டோ ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டமும்(BSc) ஐக்கிய அமெரிக்கா தெற்கு கரோலினா கிளிம்சன் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ மாஸ்டர்ஸ் பட்டமும் (MSc) பெற்றவர் ஆவார். மேலும் இங்கிலாந்தின் நிதி கற்கைகள் நிறுவகத்தின் (Chartered Institute of Bankers) ஒரு அங்கத்தவரும் ஆவார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுபவங்களை கொண்ட ஒரு வங்கியாளரான திரு. பர்ணான்டோ DFCC வங்கி Pடுஊயின் பணிப்பாளர் / பிரதான நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியூள்ளார்.

HSBC வங்கியில் தனது தொழில் வாழ்வினை ஆரம்பித்த திரு. பர்ணான்டோஇ HSBC இலங்கையின் பிரதான செயற்பாட்டு அதிகாரிஇ HSBC பங்களாதேஷின் பிரதான தொழில்நுட்ப மற்றும் சேவைகள் அதிகாரிஇ ஹொங்கொங்கினை தளமாக கொண்ட HSBC ஆசிய பசுபிக் பிராந்திய மாற்றம் மற்றும் விநியோக தலைமை அதிகாரி (வணிக வங்கியியல்இ வர்த்தகம் மற்றும் வழங்கல் வலையமைப்பு) உட்பட பல்வேறு சிரேஷ்ட முகாமைத்துவ பதவிநிலைகள் வகித்துள்ளார்.

திரு. பர்ணான்டோ இலங்கை கடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளராக உள்ளதுடன்இ பிஜி ஹோம் பைனான்ஸ் கம்பனி பணிப்பாளர் சபையின் பணிப்பாளராகவூம் கடமையாற்றுகின்றார்.