எமது சேவைகன்

                         Sri-map

தரகரான நாம் எமது வாடிக்கையாளாகளுக்கு மிகச்சிறந்த வீதத்தையும் நிபந்தனைகளையும் பெற்றுக்கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதன்பின் நட்டஈட்டுக்கோரிக்கைக்கான உதவி உட்பட விற்பனைக்குப்பின் திறமையான சேவையை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றோம்.

இலங்கையில் பரந்து இருக்கும் கிளைகள் எமது வாடிக்கையாளர்களுக்கு சேவையை அளிக்க உதவுகின்றன.

ஆபத்து மதிப்பிடல், இயன்றளவு குறைத்தல் : உங்களது காப்புறுதி தேவைப்பாடுகளைக் கையாள எமது நிபுணத்துவம் மற்றும் தொழிற்திறமையினூடாக உண்மையான, தனிப்பட்ட ரீதியான சேவையை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம். உங்களது கம்பனி எதிர் நோக்கலாம் எனக்கருதும் ஆபத்துக்களை தற்போதுள்ள காப்புறுதி ஏற்பாடுகளுடன் சம்பந்தப்படுத்தி நாம் பரிசீலனை செய்து, உங்களது கவனத்திற்கு அதற்குரிய அறிக்கையை சமர்ப்பிப்போம.

வெளிநாட்டு சந்தைத் தொடர்புகள் : குறிப்பாக விசேடமான பாரிய ஆபத்துக்கள் நிரம்பிய காப்புறுதி விடயங்கள் சம்பந்தமாக, பிரசித்தி பெற்ற சர்வதேச மீள் காப்புறுதியாளார்கள், தரகர்களுடன் நாம் இணைந்து செயற்படுவதால் எமக்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் உண்டு.  விசேட ஆபத்துக்கள், மற்றும் உள்நாட்டு வரிகள் அத்தகைய காப்புறுதிகளில் பிரயோகிக்கப்படாதவிடத்து, உலகளாவிய ரீதியில் மிகச் சிறந்த விலைப்புள்ளியைப் பெற்று, வாடிக்கையாளர்களின் சம்மதத்துடன் உள்நாட்டுக் காப்புறுதிக் கம்பனியுடன் வியாபாரத்தைத் தொடரலாம்.

ஆபத்துக்களை இடவமைத்தல் : நாம் அளிக்கும் இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு எதுவித செலவையும் ஏற்படுத்தாது. எமது நிபுணத்துவத்தை உபயோகித்து தற்போதுள்ள காப்புறுதி ஏற்பாடுகளை பரிசீலனை செய்து, சிறந்த நிபந்தனைகளைப் பெற்று, வாடிக்கையாளரின் காப்புறுதிச் செலவைக் குறைப்போம். எமக்கு எப்போதும் சந்தையுடன் தொடர்பு இருப்பதால் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் காப்புறுதியாளரால் வழங்கப்படும் சேவை என்பன பற்றி எமக்கு ஆலோசனை வழங்க முடியும்.

உரிமைக் கோரிக்கைகள் நீங்கள் காப்புறுதி பாதுகாப்பை வேண்டுவதற்கான முழு நோக்கமும், காப்புறுதி செய்யப்பட்டவை நட்டத்துக்குள்ளானால் உங்களுக்கு ஈடுசெய்ய வழிவகைகள் செய்து கொடுக்கப்படும். ஆகவே உரிமைக் கோரிக்கையால் மீட்சி பெறுவது மிக முக்கிய விடயமாகும். இவ்விடயங்களில் நீங்கள் செய்ய வேண்டிய எல்லா நடைமுறைகளுக்கும் நாம் உதவ எமக்கு அனுபவமும் நிபுணத்துவமும் உண்டு. சந்தையில் எமக்குள்ள அந்தஸ்த்து எமது பலத்தையும் செல்வாக்கையும் மேலும் கூட்டுகிறது. காப்புறுதியாளர்களுடன் பேரம்பேசி காப்புறுதி குறிக்கோள் அதிகாரியிடம் முன்வைக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படின், அதற்காக எமது வாடிக்கையாளர்களுக்கு உதவி அளிக்கின்றோம்.

 

 
உரிமைக்கோரிக்கையை தயார் செய்தல்.
உங்களது உரிமைக்கோரிக்கை சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் கீழே குறிப்பிடப்படும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

0112300444

விபத்து ஏற்படின், காப்புறுதி உரிமைக்கோரிக்கையைத் தயாரிப்பதற்கு காப்புறுதி செய்தவர் அல்லது சாரதி கீழேயுள்ளவற்றைச் செய்தல் வேண்டும.

காப்புறுதியாளருக்கு விபத்தைத் தெரிவித்தல். உங்களது காப்புறுதியாளரின் துரித அழைப்பு இலக்கம் அல்லது அழைப்பு நிலைய இலக்கம் காப்புறுதிச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே காணப்படும் காப்புறுதியாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விபத்து நடந்த இடத்திலிருந்து மேற்குறிப்பிட்ட இலக்கத்தை அழைத்து, உடனே விபத்தைத் தெரியப்படுத்தல் வேண்டும்.

பொலிசுக்கு விபத்தைப்பற்றித் தகவல் வழங்கல் மோட்டார் போக்கவரத்துச் சட்டத்திற்கு அமைய, வாகனத்தின் சாரதி அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்க வேண்டும்.

உரிமைக்கோரிக்கைக்கான தகவல் : உங்களுக்கு காப்புறுதியாளரின் துரித அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனால் முடியுமான வரை விரைவில் உங்களது காப்புறுதியாளரிடம் தொடர்பு கொண்டு விபத்தைப்பற்றியும் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றியும் அவருக்கு அறிவிப்பதுடன் பொலிஸ் முறைப்பாட்டின் பிரதியொன்றையும் அவருக்கு வழங்கவும்.

உரிமைக்கோரிக்கையைச் சமர்ப்பித்தல் :  உரிமைக்கோரிக்கைப் படிவம், சாரதி உத்தரவுச்சீட்டின் பிரதி, காப்புறுதியாளரால் வழங்கப்பட்ட கால எல்லைக்குள் பழுதுபார்ப்பதற்கு ஏற்படும் உத்தேச மதிப்பீடு என்பவற்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

உரிமைக்கோரிக்கை அங்கிகாரம் :  பழுதுபார்த்தலை ஆரம்பிப்பதற்கு முன் காப்புறுதியாளரிடமிருந்து அங்கிகாரத்தை நீங்கள் பெற்றிருத்தல் வேண்டும்.

இறுதிப்பட்டியல், அழிவு, மீட்பு மற்றும் ARI உங்களிடம் வேண்டிக்கொண்டால், பழுதுபார்த்தல் முடிவடைந்ததும், இறுதிப்பட்டியல், மீட்கப்பட்ட பாகங்கள் மற்றும் வாகனம் போன்றவற்றை பழுது பார்த்தலுக்குப் பின்னரான பார்வையிடலுக்கு ARI (After Repair Inspection) காப்புறுதியாளரிடம் சமர்ப்பியுங்கள்.

மூன்றாம் தரப்பு உரிமைக்கோரிக்கைகள் காப்புறுதியாளரின் அறிவுறுத்தல்களின்றி மூன்றாம் தரப்பு சேதங்கள் சம்பந்தமான கொடுப்பனவுகளில் ஈடுபடவேண்டாம் (மின் கம்பங்கள், தொலைபேசிக்கம்பங்கள் போன்ற அரசின் அசையா சொத்துக்கள் தவிர்ந்த) இவ்வாறு செய்யப்பட்ட கொடுப்பனவுகளை காப்புறிதியாளர் மீளச்செலுத்தமாட்டார்.