குத்தகை முறையில் கொள்வனவு

leasing-and-hire-purchase-1

இலங்கையில் 50க்கு மேற்பட்ட வருடங்களாக குத்தகை மற்றும் தவணைக் கட்டண தொழில்துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளோம். நாம் மிகக் குறைந்த காலத்துக்குள் பல வித வாகனங்களையும் உபகரணங்களையும் பெற்றுக் கொள்ள நெகிழ்வுத் தன்மையுடைய நிதி வசதிகளை உங்களுக்கு வழங்குகின்றோம்.

தற்போது கார், பஸ், லொறி, முச்சக்கர வண்டி, ஜீப், உழவு இயந்திரம், ட்ரக்டர், இயந்திரங்கள், கட்டிடத்துறை இயந்திரங்கள் மற்றும் சாதனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நாம் புத்தம் புதிய சொத்துக்களை வாங்கவோ அல்லது பாவித்த வாகனங்களை மற்றும் சாதனங்களை வாங்க மீள் குத்தகை நிதியைப் பெறவோ உங்களுக்கு உதவுகிறோம்.

உங்களது தொழிற்பாட்டு மூலதன நிதியை வழங்கவும், அவசர நிதி தேவைகளுக்கு உதவவும் பாரம்பரிய நிதி வழங்கலைவிட மிக இலகுவானதும், விரைவானதுமான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். பருவங்களுக்கு ஏற்றவாறும் உங்களது நிதி பாய்ச்சலுக்கு ஏற்றவாறும் எமது குத்தகை மற்றும் தவணைக் கொள்வனவு வசதிகளை அமைத்துக் கொள்ளலாம்.

நாடு முழுவதும் பரந்துள்ள எமது கிளைகளின் மூலம் உங்களது குத்தகை தவணைக் கொள்வனவுத் தேவைகளுக்கு எம்மை இலகுவாகத் தொடர்பு கொள்ள முடியும் மேலும், உங்கள் வசதிக்கேட்ப நாட்டிலுள்ள எந்தவொரு CF கிளை நிறுவனத்திலும் உங்களது மாதாந்த கொடுப்பனவுகளை செய்துகொள்ள முடியும்.