சிற்றளவு நிதி

deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance, cf finance sri lanka, micro finance

சிற்றளவுக் கடனானது அபிவிருத்திக்கான கதையை அமைத்துக் கொடுக்கின்றது. நிலைத்து நிற்கக்கூடிய சிறு- தொகை நிதித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் சமூகங்களின் ஜிவனோபாயத்தை முன்னேற்றுவதன் மூலம் சமூகங்களை மேம்படுத்தலாம் என நம்புகின்றோம்.

கம்பனியின் முதலாவது நுன்கடன் திட்டம் CF நவோதய ( CF Navodaya ) 2009ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இத்திட்டம் தம்புள்ள, கெப்பிட்டிப்பொல மற்றும் சூரியவெவ ஆகிய மூன்று கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் பின்மத்திய, சப்பிரகமுவ, வயம்ப, வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு 18 நுண் கடன் அலகுகளாக விரிவாக்கப்பட்டது.

விவசாயம், விலங்குப்பண்ணை, மீன்பிடி, மரவேலை, சீமெந்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகள், தையல் போன்ற குடிசை கைத்தொழில்கள் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்து வருமானத்தை உயர்த்தும் வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஆண் பெண் இருபாலாருக்கும் நிதியுதவி வழங்குவதே CF நவோதயவின் குறிக்கோளாகும்.

பாற்பண்ணை விவசாயிகளுக்கு கடன் திட்டத்தை CF Navodaya அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பசுக்களை வாங்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் மேய்ச்சல் நிலப்பயிர்செய்கை செய்யவும் உயிர்வாயு முறையை அபிவிருத்தி செய்யவும் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகின்றது.

நவோதய திட்டத்தின் கீழ் உள்ள கடன் குழுவின் அங்கத்தவர்களுக்கும் தனிப்பட்ட நபர்களுக்கும் CF கடன்களை வழங்குகின்றது. சமூகத்திலுள்ள பெண்களுக்கும் அத்தகைய கடன் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப் பெண்களின் திறன்களை வருமானம் ஈட்டும் திட்டங்களில் உபயோகித்து அவர்களது வாழ்வை மேம்படுத்துவதே இத்தகைய திட்டத்தின் நோக்கமாகும். சமூகங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கி எவ்வாறு தொழில் திட்டத்தை சிறப்படையச் செய்யலாம் என்பதைப் புகட்டும் பொருட்டு வியாபார முனைவர் அபிவிருத்தி திட்டங்களை கம்பனி ஏற்பாடு செய்கின்றது.

சென்றல் பினான்ஸ் (CF) கம்பனி இதுவரை ஏறத்தாள 1200 குடும்பங்களின் வாழ்க்கையை வளப்படுத்தியதையிட்டு நாம் பெருமையடைகின்றோம். இவர்களுக்கு 200 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையை 2400 கடன்களாக வழங்கினோம். இத்திட்டத்தின் பயனாளிகள் பலர் தற்போது இரண்டாவது அல்லது மூன்றாவது கடன் சுழற்சியில் இருப்பதோடு, அவர்களது சமூகத்தின் அபிவிருத்தியும் அவர்களது வாழ்க்கைத்தரத்தின் மேம்பாடும் குறிப்பிடத்தக்கது.