சென்ட்ரல் பினான்ஸ் வீசா டெபிட் காட்

எங்கும் தாராளமாய் பயன்படுத்தக்கூடிய CF VISA டெபிட் காட் உங்களுக்குப் பல்வேறு மேலதிக வசதிகளை வழங்குவதுடன், உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு ஒரு புதிய பாிமாணத்தையும் வழங்குகிறது. 24 x 7 x 365 எந்நேரமும் பயன்படுத்தக்கூடிய இந்த டெபிட் காட்டை CF சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.

CF VISA டெபிட் காட் மூலம் பணத்தை மீளப்பெறல் மற்றும் கணக்கு மீதி விசாரணை போன்ற ATM கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது உள்ளுா் மற்றும் சா்வதேச ரீதியாக சுப்பா் மாா்க்கெட்டுகள், ஷொப்பிங் மோல்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் வணிக வளாகங்களிலும் இதை இலகுவாகவும், வசதியாகவும் பயன்படுத்தலாம்.
cf visa debit card


அது உங்களுக்கு வழங்கும் வசதிகள்:

cf visa debit card

 • • பணம் மீளப்பெறல் (ஒரு நாளைக்கு இலங்கை ரூபா 50,000 வரை)
 • • மினி அறிக்கைகள்
 • • உங்கள் சொந்த கணக்குகளுக்கிடையிலான பணப் பரிமாற்றம்
 • • கணக்கு மீதிகளைப் பெறல்
 • • ஏற்றுக்கொள்ளப்பட்ட வணிக நிறுவனங்களில் உங்கள் கொள்வனவூ மற்றும் சேவைக் கட்டணங்களை (ஒரு நாளைக்கு இலங்கை ரூபா 100,000 வரை) VISA டெபிட் காட் மூலம் செலுத்தலாம்.
 • • கொடுக்கல் வாங்கல்கள் SMS மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.
 

உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:

cf visa debit card

 • • உலக அளவில் ஒரே நாணயத்தின் மூலம் நீங்கள் வாங்கும் பொருட்கள், சேவைகளுக்குப் பணம் செலுத்த அனுமதியளிக்கிறது.
 • • 24 மணிநேரமும் கிளைக்குச் செல்லாமலே உங்கள் கணக்கை நீங்கள் நிா்வகிக்கலாம்.
 • • பணத்தை எடுத்துச் செல்வது பற்றியும், அதன் பாதுகாப்புப் பற்றியும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
 • • இலகுவானதும் பாதுகாப்பானதுமான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம்.
 • • சிறந்த நிதி முகாமைத்துவத்தை வழங்குகிறது.
 • • அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் உங்கள் கணக்குப் புத்தகத்தில்/அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்படும்.
 
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் : 077-2368748 அல்லது 077-2368749