வாகனத்தொகுதி வாடகை ( ப்லீட் ஹயர்)

வாகனத் தொகுதி வாடகைக்கு விடுதல்

நாட்டின் மிகப் பாரிய வாகனத்தொகுதி முகாமைத்துவம், மற்றும் வாகனத்தை வெளியாட்களுக்கு ஒப்படைக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள நாம், எமது வடிக்கையாளர்கள் மீது கொண்டுள்ள அக்கறையின் நிமிர்த்தம் ஸ்தாபனங்களுக்கு வாகனத்தொகுதிக்கான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வாகனங்களை எப்போதும் சாத்தியமான விலையில் கொள்வனவு செய்வதற்கு எமது கொள்வனவுச் சேவை உதவியளிக்கும்.

ஒரு ஒழுங்கான மாதாந்தக் கொடுப்பனவுடன் உங்களுக்கு இரண்டு விரிவான தேர்வுகளுண்டு. ஒன்று பாதைப்பராமரிப்பை உள்ளடக்கியது, மற்றையது அச்சேவை தவிர்ந்தது.

பாதைப் பராமரிப்புடனான சேவையை நீங்கள் தெரிவு செய்தால் கீழேயுள்ள பலன்களை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நிலையான மாதாந்த தொடர் செலவுகள்.
பராமரிப்புத் தொல்லை இல்லை.
காப்புறுதி தொந்தரவு இல்லை.
  விபத்து அல்லது வாகனம் பழுதடைந்து விட்டால், பிரதி உபகாரமாக இலவசமாக வாகனம் ஒன்று வழங்கப்படும்.
நாடு எங்கிலும் பரந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையங்களிலிருந்து உதவி.
24/7 365 நாட்கள் அர்பணிப்பான வாடிக்கையாளர் சேவை.
உங்கள் பாதுகாப்பு மற்றும் மன அமைதிக்கு, தொழிற்திறனான வாகன மீட்புக் குழு க்கள் எப்பொழுதும் தயார் நிலையில் உள்ளனர்.
இச்சேவையின் நிதி அனுகூலங்கள் யாவை?
deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance,   cf finance sri lanka

ஒப்பந்த காலத்திற்கு ஒரு நிலையான வாடகைத்தொகை.

வாகனத்தை கொள்வனவு செய்வதற்குப் பதிலாக, உங்களது நிதியை உங்களது பிரதான வியாபாரத்தில் முதலிடுவதற்கான இயலுமை. வாகன கொள்வனவை எம்மிடம் விட்டு விடுங்கள் நாம் உங்களுக்காக கொள்வனவு செய்வோம்.

எல்லா பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் செலவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

உங்களது வாகனத்தை தெரிவு செய்வது முதல், நிதி வழங்கல், பழுது பார்த்தல், பராமரித்தல் மற்றும் ஒப்படைப்பு வரையான நிர்வாக வேலைகளை CF ஒப்பந்த வாடகைக் குழு கையாளும்.

ஒப்பந்த காலத்திற்கு சமனான கொடுப்பனவுகள் (CF Contract Hire).

கொடுப்பனவு முறையைத் தெரிவு செய்யலாம்.

பராமரிப்புச் சேவைகளில் விரும்பியதைத் தெரிவு செய்யலாம.

குறைந்த நிர்வாகச் செலவுகள்.

உங்கள் நிதித் திட்டமிடலை சிறப்பிக்கும்.

உங்கள் வாங்கும் சக்தியை செல்வாக்கு உட்படுத்தும் திறன்.

உங்கள் இயக்கச் செலவுகளைச் சீராக்கும்.

இத்துறையிலுள்ள எமது நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தினூடாக உங்கள் செலவைக் குறைக்கலாம்.

ஆகக்குறைந்த வாடகைக்கு வழங்கும் காலம் உண்டா?
deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance,   cf finance sri lanka

வாடகைக்கு அமர்த்தும் காலத்தைப் பொறுத்த வரையில் தெரிவு உங்களுடையதாகும். கம்பனியின் நடைமுறை நிதிப்பாய்ச்சல் நிலை, பொருளாதார சுற்றோட்டம் கம்பனியின் பொதுவான கார் கொள்கை, கம்பனியின் நடத்தைப் பண்பை பேணுதல் போன்ற காரணிகளைக் கருத்திற்கொண்டு, உங்களது கம்பனியின் தேவைகளுக்கு மிகப் பொருத்தமான ஒப்பந்த காலத்தைத் தீர்மானிக்க நாம் உதவுவோம்.

பழுது பார்த்தல் பற்றுச்சீட்டுகளைப் பற்றி என்ன கூறப்படுகின்றது?
deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance,   cf finance sri lanka

 

பராமரிப்புச் சேவையை உள்ளடக்கிய வாடகை ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட நீங்கள் தீர்மானித்தால், 8 மணித்தியாலத்திற்கு மேல் உங்களது வாகனம் பாதையில் பயணிக்க முடியாமல் போய்விடும் சந்தர்ப்பத்தில், அவ்வாகனத்திற்குப் பதிலாக இலவசமாக உங்களுக்கு வாகனம் ஒன்றை நாம் வழங்குவோம்.

என்னிடம் தற்போதுள்ள வாகனத்தொகுதியை நான் பாவிப்பதற்கு, அவற்றை விற்பனை செய்து, குத்தகைக்கு மீளப்பெறும் வசதி உண்டா?
deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance,   cf finance sri lanka

ஆம் உண்டு. நடைமுறையிலுள்ள சந்தை விலையில் உங்களிடம் தற்போதுள்ள வாகனத் தொகுதியை அல்லது சாதனத்தை நீங்கள் சென்ட்ரல் பினான்சுக்கு விற்று, மீண்டும் அவைகளை CF ஒப்பந்த வாடகைக்குப் பெற்று, உங்களது நிலையான சொத்தின் பெறுமதியை பெறுவதுடன் உங்களது ஐந்தொகையை மேம்படுத்தி, வரி அனுகூலங்களையும் பெறலாம்.

விற்பனை செய்து மீண்டும் குத்தகைக்குப் பெறுவதின் பயன்கள்.
deposite, savings, leasing, hire purchase, insurance, vehicle hire, investments, finance, vehicle purchace, cf finance,   cf finance sri lanka

நிதி விகிதங்களை மேம்படுத்தும் வாகனங்களை விற்று, மீண்டும் குத்தகைக்கு பெறுதலின் மூலம் பல நிதிவிகிதாசாரங்களை உயர்த்த முடியும் குறிப்பாக சொத்து வருமான விகிதத்தையும், கடனுக்கும் உரிமையாண்மை மூலதனத்துக்குமான விகிதாசாரத்தை மிகைப்படுத்தும்.

அடிப்படைப் பெறுமதியை மேம்படுத்துதல் விற்பனையும் குத்தகைக்குத் திரும்பப்பெறுதலும் இலாப நட்ட அறிக்கையில் உள்ளடக்கப்படும்.

ஜந்தொகையை மேம்படுத்தும் விற்பனை செய்து குத்தகைக்குப் திருப்பிப்பெறுதல் கொடுக்கல் வாங்கல்கள் கடனைக் குறைக்கும்.

நிறுவன நடவடிக்கைகளை சிறப்பிக்கும் விற்பனை செய்து குத்தகைக்குத் திருப்பிப் பெறுவதன் மூலம் கிடைக்கும் தொகையைத் தமது ஸ்தாபன நடவடிக்கைகளுக்கு அதனை பயன்படுத்தி, நிறுவன செயல்த்திறனை அதிகரிக்கலாம்.

வருமானம் தராத சொத்துக்களை மூலதன முதலாக மாற்றும் கம்பனிகள் அதிகரித்த இலாபத்தைக் காண முடியும்.

அடிப்படைக் குறிக்கோளில் கவனம் செலுத்துதல். விற்பனை மற்றும் குத்தகைக்கு மீளப்பெறும் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் உரிமையாளர் துணைநல நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதை விட்டு, நிறுவனத்தின் அடிப்படைக் குறிக்கோளில் தனது கவனத்தைச் செலுத்த உதவுகிறது.